சிந்தனை கலை வெளிபாட்டு வடிவங்களில் சிறப்பான ஒரு வடிவம் பட்டிமன்றம் ஆகும். முரண்பாடான பலநோக்கங்ளை உடைய கருத்துக்களை விபரிக்க, விவாதிக்க, பரப்புரைக்க பட்டிமன்றங்கள் உதவுகின்றன. வன்முறையற்ற, பண்புபட்ட முறையில், கருத்துக்களையும் பேச்சுத் திறனையும் முன்வைத்து, சிக்கலான பிரச்சினைகளை அலச பட்டிமன்றங்கள் உதவுகின்றன.
தமிழர்
பொதுவாக ஆங்கில அல்லது மேற்கத்தைய விவாதங்களின் போது ஒரு விடயத்தை இரு துருவங்களில் இருந்தே வாதிப்பர். அதாவது சார்பு, எதிர்ப்பு. தமிழ்ப்பட்டிமன்றங்களில் மும்முனை அல்லது பல்முனை விவாதங்கள் வழக்கமாக அமைகின்றன.